ரொறன்ரோவில் பெய்ந்து வரும் கடும் மழை!
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதாகவும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் நகர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதிகள் வாகன தரிப்பிடங்கள் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பன நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் மழை காரணமாக டொரன்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டு முனையங்களில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் விமானம் நிலையம் முழுமையாக முடங்கவில்லை எனதெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக சில விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் விமான நிலையத்திற்கு செல்ல முன்னர் அறிவிப்புகளை கண்காணிக்குமாறு விமான நிலைய நிர்வாகம் கோரியுள்ளது.
சுமார் 14 வீதமான விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் ஒன்றாரியோ பகுதியில் சீரற்ற காலநிலை காரணமாக அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மழை வெள்ளம், இடி மின்னல் தாக்கம் போன்றனவும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சில பகுதிகளில் 100 மில்லி மீட்டர் வரையில் மழை பெய்ததாக கனடிய காலநிலை மாற்ற மற்றும் சுற்றாடல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரொறன்ரோவில் வழமைக்கு மாறாக கடும் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் இரவும் கடுமையான மழை பெய்யும் எனவும் இடி மின்னல் தாக்குதல்கள் ஏற்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வெள்ள நிலைமைகள் காரணமாக வீதிகளில் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.