பிலிப்பைன்சில் கனமழையால் 13 பேர் பலி
பிலிப்பைன்ஸில் கனமழை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியாகியுள்ளது.
தென் சீனக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. 'கெமி' என பெயரிடப்பட்டுள்ள புயல், கிழக்கு நோக்கி தைவான் நோக்கி நகர்ந்து தற்போது பிலிப்பைன்ஸ் அருகே கடலில் மையம் கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸில் கனமழை பெய்தது. கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் முக்கிய நகரங்கள் அழிந்துள்ளன.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புயலால் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையில் இருந்த 6 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் அந்நாட்டு பேரிடர் மீட்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.