உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து; உள்துறை அமைச்சர் பலி!
உக்ரேனில் ஹெலிகாப்டர் பாலர் பாடசாலையொன்றின் மோதி வீழ்ந்துள்ளது. உக்ரேனின் உள்விவகார அமைச்சர் டேனிஸ் மொனாஸ்டிரிஸ்கிம் இச்சம்பவத்pழல் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கியேவ் பிராந்தியத்திலுள்ள புரோவரி நகரில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் அவரின் துணை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பாலர் பாடசாலையொன்றில் வீழ்ந்து தீப்பற்றியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் சிறார்களும் அடங்கியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது, ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு என AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், ஆபத்துகால உதவிக்கான ஹெலிகாப்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது