ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல்
காசா மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் செயல்பட்டு வரும் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், இன்று காலை லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டபோது அதற்குப் பதிலடி கொடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலிய நகரமான மெதுலா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏழு வார போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், போர் நிறுத்தம் நீடிப்பு தொடர்பாகப் பேச்சுவார்த்தை தொடர்ந்தும் நடைபெறவில்லை.
இந்தநிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் இந்த தாக்குதல் இன்னும் அதிகரிக்கப்படும் எனவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.