ஒட்டாவாவில் பதிவான சாதனை வெப்பநிலை
கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த 5ஆம் திகதி வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிற்பகல் 1 மணிக்கு ஒட்டாவா விமான நிலையத்தில் 28.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி, 1941ஆம் ஆண்டில் பதிவான 27.2 பாகை சாதனையை முறியடித்தது.
பின்னர் பிற்பகல் 3 மணியளவில் வெப்பநிலை உச்சமான 29.7 பாகையாக உயர்ந்தது. மாலை 5 மணியளவில் அது 28.2 பாகையாக குறைந்தது.
வழக்கமாக இந்த காலத்தில் ஒட்டாவாவில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 15 பாகையாக இருக்கும்.
இரவு வெப்பநிலை 14 பாகையாக குறையலாம். திங்கட்கிழமை வெயில் அதிகமாகி 30 பாகை செல்சியஸ் வரை உயரும் எனவும், ஈரப்பதன் காரணமாக வெப்பநிலை 33 பாகை போன்றிருக்கும் எனவும் முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
இது 1946இல் பதிவான 27.2 டிகிரி சாதனையையும் முறியடிக்கக் கூடும். செவ்வாயன்று மழை வாய்ப்புடன் வெப்பநிலை 24 பாகயைாகக் குறையக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.