ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் கைதான பல வெளிநாட்டவர்கள்
ஈரானில் பரவியுள்ள ஹிஜாப் உடைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதாக கூறி 9 வெளிநாட்டவர்கள் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் ஈரானிய நிர்வாகம் வெளியிட்ட தகவலில், கைதானவர்களில் ஜேர்மனி, போலந்து, இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டவர்கள் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
ஈரானில் 22 வயது Mahsa Amini என்பவர் முறைப்படி ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி சிறப்பு பொலிசாரால் கைதானார். பின்னர் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், பெண்களும் பொதுமக்களும் இணைந்து ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, குறித்த போராட்டங்கள் அனைத்தும் வெளிநாட்டு சதி எனவும், அவர்களின் தூண்டுதலால் கடந்த பல நாட்களாக போராட்டம் நீடிப்பதாகவும் அரசு தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த நிலையிலேயே வெளிநாட்டவர்கள் 9 பேர் கைதானியுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஒரு ஸ்வீடிஷ் சுற்றுலாப் பயணி, இரண்டு பிரெஞ்சு குடிமக்கள், போலந்து விஞ்ஞானி மற்றும் பலர் உட்பட பல ஐரோப்பியர்கள் சமீபத்திய மாதங்களில் ஈரானில் விசாரணை நிமித்தம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.