அமெரிக்காவில் இந்து பாரம்பரிய மாத கொண்டாட்டம்
அமெரிக்காவில் அக்டோபர் மாதம் முழுவதும் இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படும் நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்துக்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்கா இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தமுள்ள 50 மாகாணங்களில் டெக்சாஸ், நியூ ஜெர்சி, ஜார்ஜியா, புளோரிடா, மிச்சிகன் உட்பட 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அரசு வெளியிட்டு உள்ளது.
அந்த அறிவிப்பில், அமெரிக்கர்களின் வாழ்வில் இந்து கலாசாரம் இன்றியமையானத ஒன்று, இதனை அங்கீகரிக்கும் வகையில் இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வரவிருப்பதால், பாரம்பரிய மாதத்தை மேலும் சில வாரங்கள் நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.