கார் ஏற்றி கொல்லப்பட்ட ஹிந்து இளைஞன் ; பங்களாதேஷில் அரங்கேறும் கொடூரம்
பங்களாதேஷில் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஹிந்து ஊழியர், கார் ஏற்றி கொல்லப்பட்டுள்ளார்.
பங்களாதேஷில் கடந்தாண்டு ஏற்பட்ட, முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சி மாற்றத்துக்குப் பின், ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ராஜ்பாரி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், காரில் வந்தவர்கள், பெட்ரோல் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமல் தப்பி செல்ல முயன்றனர்.
அதை தடுக்க முயன்ற, ரிபான் சாஹா, 30, என்ற ஹிந்து ஊழியர் மீது, காரை ஏற்றிக் கொன்று தப்பினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில் பயணித்த, அப்துல் ஹஷீம், டிரைவர் கமல் ஹுசைன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அப்துல் ஹஷீம், வங்கதேச தேசியவாத கட்சியின் மாவட்ட பொருளாளராக இருந்தவர்.