பங்களாதேஷில் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஹிந்துக்கள் பேரணி
பங்களாதேஷில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து டாகாவில் ஹிந்துக்கள் பேரணி நடத்தினர். அப்போது, ‛ ஹரே கிருஷ்ணா ' என கோஷம் போட்டபடி சென்றனர். பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வன்முறையாளர்கள், ஹிந்துக்கள், அவர்களின் வீடுகள், சொத்துகள், கோயில்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
45க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இது ஹிந்துக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ஹிந்துக்கள் டாகாவில் ஒன்று கூடி பேரணியில் ஈடுபட்டனர்.
பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்ட இந்த பேரணியில் ‛ஹரே கிருஷ்ணா' என கோஷம் போட்டதுடன், நாட்டில் சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என்ற வாசகம் கொண்ட பதாகைகளையும் ஏந்திச் சென்றனர்.
நாங்களும் பெங்காலிஷ் தான் எனவும் கோஷம் போட்டனர்.
பங்களாதேஷில் நடக்கும் வன்முறையில் இருந்து ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களை காக்க வேண்டும் எனக்கூறி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகம் முன்பு பேரணி நடத்தப்பட்டது.
வாஷிங்டனைச் சேர்ந்த ஹிந்து ஆக்ட் இன் என்ற தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.