பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை ஆபத்தான நிலையில் : இறுதி சடங்குகளுக்கு ஒத்திகை
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது.
88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், சுவாச கோளாறு காரணமாக கடந்த 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்திய பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை
இதனால் வத்திகான் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அத்துடன் வத்திக்கானில் பாப்பரசரின் இறுதி சடங்குகள் தொடர்பான ஒத்திகை இடம்பெறுவதாகவும் போப்பாண்டவரின் மரணச்சடங்கு தொடர்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகளும் ஆரம்பிக்கபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.