கனடாவின் இந்தப் பகுதியில் பெற்றோல் விலை பாரியளவில் வீழ்ச்சி
கனடாவின் வான்கூவார் பெருநகர பகுதியில் பெற்றோலின் விலை பாரியளவில் வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு லீற்றருக்கு 35 சதங்கள் என்ற அடிப்படையில் விலை வீழ்ச்சியடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனேடிய வரலாற்றில் ஒரே நாளில் பதிவாகும் அதி கூடிய விலை வீழ்ச்சிகளில் ஒன்றாக இது பதிவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வான்கூவாரில் தற்பொழுது ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 227.9 சதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் மாதம் 30ம் திகதி ஒரு லீற்றர் பெற்றோல் 241.9 சதங்களாக விற்பனை செய்யப்பட்டது.
எவ்வாறெனினும், இன்றைய தினம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 192.9 சதங்களாக விற்பனை செய்யப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனடாவின் ஏனைய பகுதிகளை விடவும் வான்கூவாரில் பெற்றோலின் விலை உயர்வாகவே காணப்படுகின்றது.
இன்றைய தினம் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் தொடர்ந்தும் விலை அதிகரிப்பு பதிவாகும் என சந்தை வல்லுனர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.