இந்த நூற்றாண்டின் ஹிட்லர் புடின்; வைரலாகும் கேலிச்சித்திரம்
ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் உக்ரைன் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டிலில் ஜெட்மனியின் முன்னாள் நாஜி தலைவர் அடால்ஃப் ஹிட்லர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் கன்னங்களைத் தொட்டு வணங்குவதைக் காட்டும் கேலிச்சித்திரத்தை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் "புடின் இந்த நூற்றாண்டின் ஹிட்லர்" என நெட்டிசன்கள் கருத்து கூறி வரும் நிலையில் உக்ரைனின் இந்த செயல் கூடுதல் முக்கியர்த்துவம் பெற்றுள்ளது. உலகெங்கிலும் பல நூற்றாண்டுகளாக, துயரம் ஏற்படும் போதெல்லாம், கலை செழித்தோங்குவதைக் கண்டிருக்கிறோம்.
அந்த வகையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் நெருக்கடி, விதிவிலக்காக இருக்க முடியாது." எனவும், ஏவுகணை மழை பொழியும் மற்றும் டாங்கிகளுடன் நாட்டிற்கு எதிராக ரஷ்யா போரை அறிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் உக்ரைன் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த கேலிச்சித்திரம், எந்த உரையும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளதாக உக்ரைன் எம்.பி. ஒருவர் கூறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
