பிரிட்டிஷ் கொலம்பியாவில் எய்ட்ஸ் குறித்து எச்சரிக்கை
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் எய்ட்ஸ் பரவுகை தொடர்பில் எச்சரிக்கை விரிக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 முடக்க நிலைமைகள் காரணமாக எச்ஐவி மருத்துவ சேவைகளில் ஏற்பட்ட பின்னடைவினால் எச்ஐவி பரவுகை அதிகரித்துள்ளது.
குறிப்பாக போதைப்பொருள் பயன்படுத்துவோர் மத்தியில் இந்த நோய் தொற்று பரவுகை அதிகரித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
நோய் கட்டுப்பாட்டு வழிமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த காரணத்தினால் கடந்த காலங்களில் நோயாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் எச்.ஐ.வீ தொற்றாளிகளை கண்டு பிடிக்கும் பொறிமுறைமை சிறந்த வகையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், கோவிட் பெருந்தொற்றின் பின்னர் சிகிச்சைகளை வழங்குவதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.