விடுமுறை காலத்தை கனடியர்கள் கூடுதலாக செலவிட்டுள்ளனர்
இந்த விடுமுறை காலத்தில் கனடியர்கள் கடந்த ஆண்டை விட அதிகமாக செலவிட்டுள்ளனர் என புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
டிஜிட்டல் கட்டண சேவை நிறுவனம் வீசா கனடா நிறுவனம் வெளியிட்ட ஆரம்ப தரவுகளின்படி, பணம், காசோலை உள்ளிட்ட அனைத்து கட்டண முறைகளையும் சேர்த்து, விடுமுறை கால சில்லறை விற்பனைச் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு 4.4 சதவீதம் உயர்ந்துள்ளன.
இந்த அறிக்கை பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தயாரிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த விடுமுறை காலச் செலவுகளில், 88 சதவீதம் நேரடி கடைகளில் நடைபெற்றுள்ளதுடன், 12 சதவீதம் ஆன்லைன் ஷாப்பிங்கில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கனடியர்கள் ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்கு அதிகமாக செலவிட்டுள்ளனர் என அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், ஒரே இடத்தில் பல பொருட்கள் கிடைக்கும் one-stop shop கடைகள், வசதிக்காக வாங்கும் நுகர்வோரின் முதன்மை தேர்வாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை காலம், நுகர்வோரின் வாங்கும் பழக்கத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையை குறிக்கிறது என வீசா நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் வேன் பெஸ்ட் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், பொருட்களை கண்டறிதல், விலைகளை ஒப்பிடுதல் மற்றும் சலுகைகளுடன் நுகர்வோர் தொடர்பு கொள்ளும் முறைகளில் அதிகமாக தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன் விளைவாக, கனடியர்கள் மேலும் விழிப்புணர்வுடனும் திட்டமிட்ட முறையிலும் செலவு செய்யும் நுகர்வோர்களாக மாறி வருவதாகவும், தங்களின் பணத்திற்கு அதிக மதிப்பு கிடைக்குமாறு கவனம் செலுத்தி வாங்குவதாகவும் வேன் பெஸ்ட் விளக்கினார்.