ஆறு உயிர்களை காவு கொண்ட வோகன் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை
ஆறு உயிர்களை காவு கொண்ட வோகன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒன்றாரியோவின் விசேட விசாரணைப் பிரிவினர், யோர்க் பிராந்திய பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபர்கள் உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்தனர். பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
நான்கு விசாரணையாளர்களும், இரண்டு இரசாயன பகுப்பாய்வாளர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனை நாளைய தினம் நடைபெறவுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக பொலிஸார் தெரிவிக்கினற்னர்.
உயிரிழந்தவர்களின் விபரங்களை தற்போதைக்கு வெளியட முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.