பிரான்ஸில் நோயாளியால் பரபரப்பான மருத்துவமனை; அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பிரான்ஸின் Toulon நகரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு கடந்த சனிக்கிழமை இரவு வந்த நபர் கூறிய விடயத்தால் மருத்துவமனையே பரபரப்பானது.
தனது ஆசனவாயில் ஒரு பொருளை நுழைத்ததாகவும், அதை திரும்ப எடுக்க முடியவில்லை எனவும் அவர் கூற, அது என்ன பொருள் என பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அது, பிரெஞ்சு இராணுவம் முதல் உலகப்போரின்போது பயன்படுத்திய ஒரு வெடிகுண்டு என தெரியவந்துள்ளது. உடனே பதறிப்போன மருத்துவர்கள் பொலிஸாருக்கு தகவலளிக்க, வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.
சிறுவர் வார்டுகள் உட்பட பல வார்டுகளிலிருந்த நோயாளிகளும் ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டார்கள். இந்நிலையில் அந்த நபர் அந்த வெடிகுண்டை எளிதாக ஆசனவாயில் நுழைத்துவிட்டார்.
ஆனால், அதை எளிதாக வெளியே எடுக்க முடியவில்லை.ஆகவே, அந்த நபரின் அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்துதான் அந்த வெடிகுண்டை எடுக்கமுடிந்தது.
இவ் விடயம் அந்த மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அறுவை சிகிச்சைக்குப்பின் அந்த நோயாளி நல்ல நிலைமையில் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஆனால், அவர் எதற்காக அந்த வெடிகுண்டை தனது ஆசனவாய்க்குள் நுழைத்தார் என்பதை என்பதற்கான காரணத்தை கடைசிவரை அவர் கூறவேயில்லை.