ரொறன்ரோவில் 8 அடி அகலம் மட்டுமே கொண்ட வீடு இத்தனை மில்லியன்களா?
ரொறன்ரோவின் 138 சென் க்ளேரன்ஸ் அவன்யூவில் அமைந்துள்ள வீடு ஒன்றின் அகலம் வெறும் எட்டு அடிகள் மட்டுமே என்ற போதிலும் அந்த வீட்டின் விலை 2 மில்லியன்களாகும்.
ரொறன்ரோவின் லிட்டில் போர்த்துகல் என அழைக்கப்படும் பகுதியில் இந்த வீடு அமைந்துள்ளது.
வீடு விற்பனை குறித்த பட்டியலில் இந்த வீட்டின் விலை 1950000 டொலர்கள் என பட்டியலிப்பட்டுள்ளது.
இந்த வீட்டை வெளியே பார்த்தால் மிகவும் குறுகிய சிறிய வீடாக தென்படும். எனினும், வீட்டின் உள் பகுதி பெரிதாக தெரியும் வண்ணம் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடு மூன்று மாடிகளைக் கொண்டது, மூன்று பகுதிகளும் தனித்தனியான நுழைவாயில்களைக் கொண்ட தனிக் குடியிருப்புக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீட்டை தனியொரு குடும்பம் பயன்படுத்தக்கூடிய வகையிலும் மாற்றி பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.