தமிழர் தாயகத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர்களின் நினைவேந்தல் தொடங்கியது!
தமிழர் தாயகத்தில் மாவீரர்களை உணர்வுபூர்வமாக நினவிவேந்தலுக்கான பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இலங்கையின் நேரப்படி 6.05 மணியளவில் தொடங்கியுள்ளது.
தமிழீழத் தனியரசு அமைப்பதற்காக இறுதி மூச்சு வரை போராடி வீரச்சாவைத் தழுவிய வீரமறவர்களை - தவப் புதல்வர்களை - காவல் தெய்வங்களைத் தரணியெங்கும் வாழும் தமிழர்கள் உணர்வுடன் பூசிக்கும் மாவீரர் நாள் இன்றாகும்.
மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள் மற்றும் விசேட இடங்களில் மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்றைய தினம் (27-11-2023) மாலை 6:05 இற்கு நினைவொலி எழுப்பப்படும். 6:06 இற்கு அகவணக்கம் செலுத்தப்படும். 6.07 இற்கு ஈகச்சுடர் ஏற்றப்படும் என தெரிவித்த நிலையில் தற்போது நினைவேந்தல் தொடங்கியுள்ளது.