கப்பலை கடத்திய ஹவுதி போராளிகளால் பரபரப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் சரக்கு கப்பலை ஏமன் கடலில் ஹவுதி போராளிகளால் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா துறைமுக நகரத்திற்கு அருகில் வைத்தே குறித்த சரக்கு கப்பலை ஹவுதி போராளிகள் கடத்தி சென்றுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்குரிய ரவாபி என்னும் சரக்கு கப்பலை, ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கும் ஹவுதி போராளிகள் கடத்தி சென்றதாக கூறப்படுகின்றது. இந்த கப்பலில் Socotra என்னும் தீவில் இருக்கும் சவுதி மருத்துவமனைக்குரிய மருத்துவ உபகரணங்கள் ஏற்றி செல்லப்பட்டிருக்கிறது.
Yemen’s Houthis hijack UAE-flagged cargo ship off Hudaida, alleging it was carrying military equipment “targeting security and stability of the Yemeni people”.
— TRT World (@trtworld) January 3, 2022
Here’s the latest ? pic.twitter.com/FULwXE48OM
இந்நிலையில் சவுதி தலைமையில் இயங்கும் அரபு கூட்டுப்படை, ஹவுதி போராளிகள் உடனடியாக கப்பலை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.
மேலும், அந்த சரக்கு கப்பலை மீட்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில் படைகளை களமிறக்க தயாராகவுள்ளதாகவும் கூட்டுப்படை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.