செங்கடலில் 10 லட்சம் கச்சா எண்ணெய் பரவும் அபாயம் !
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் கப்பல்களை ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த 21-ந்தேதி சௌனியான் என்ற சரக்கு கப்பல் மீது சிறிய வகை ஆயுதம் மற்றும் டிரோன் படகு மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் கப்பல் லேசான காயம் அடைந்தது.

10 லட்சம் கச்சா எண்ணெய் பேரல்கள்
இதற்கிடையே கப்பலில் இருந்த ஊழியர்களை பிரான்ஸ் படைகள் காப்பாற்றியது. இதனால் கப்பல் கைவிடப்பட்டது. செங்கடலில் தனியாக நின்ற கப்பலில் ஹமாஸ் அமைப்பினர் இறங்கு துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தினர்.
மேலும் கச்சா எண்ணெய் பேரல்கள் இருக்கும் டேங்கர்களை குண்டு வைத்து தாக்கினர். சுமார் ஆறு இடங்களில் குண்டு வைத்து தகர்த்தனர்.

இது தொடர்பான வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். அந்த கப்பலில் ஒரு மில்லியன் (10 லட்சம்) கச்சா எண்ணெய் பேரல்கள் இருக்கிறது. இந்த எண்ணெய் உடன் கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் செங்கடலில் கச்சா எண்ணெய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கடல் வழியாக ஆண்டிற்கு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது.
 
அதிலும் முக்கியமாக ஐரோப்பிய உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு உணவு தானியங்கள் கொண்டு செல்வதற்கு இந்த வழித்தடம் பயன்படுத்தப்பட்டு வருகின்மை குறிப்பிடத்தக்கது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        