மோசடிகளில் சிக்கிய 638 மில்லியன் டொலர்களை இழந்த கனடியர்கள்
கனடாவில் நிதி மோசடி சம்பவங்களில் சிக்கி சுமார் 638 மில்லியன் டொலர்கள் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் கனேடியர்கள் இவ்வாறு பெருந்தொகை பணத்தை இழந்துள்ளனர்.
கனடிய மோசடி தவிர்ப்பு நிறுவனத்தினால் Canadian Anti-Fraud Centre (CAFC) இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி மோசடிகள் கடந்த பத்து ஆண்டுகளில் இருமடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செயற்கை நுண்ணறிவு மோசடிகளை அதிகரித்துள்ளதாக நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர் கார்மி லெவி தெரிவித்துள்ளார்.
நிதி சேவைத்துறையில் இது “பெரும் நெருக்கடி” நிலையை உருவாக்கி வருவதாகவும் எச்சரித்துள்ளார்.
வங்கிப் பணியாளர் அல்லது நிறுவன பிரதிநிதி எனக் கூறி பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களை பறிக்கும் இந்த மோசடிகளில் பலர் இலக்காகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.