அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ; ஒன்லைன் கொள்வனவில் வந்த மனிதக் கை
அமெரிக்காவின் கென்டக்கியில் பெண் ஒருவர் ஒன்லைன் மூலம் மருந்துகளைக் கொள்வனவு செய்த நிலையில், பொதியில் மனித கைகள் விநியோகம் ஆனதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
ஹோப்கின்ஸ்வில்லே என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிற்குப் பொதியில் ஐஸ் பேக் செய்யப்பட்ட மனித உறுப்புகள் விநியோகம் ஆனதை அடுத்து அப்பெண் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை அதிகாரி, பொதியில் வந்த உடற்பாகங்களைக் கைப்பற்றிச் சென்றார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட மனித பாகங்கள் உடலுறுப்பு மாற்றுச் சிகிச்சைக்காக நாஷ்வில்லே என்ற இடத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட இருந்ததாகவும், தவறுதலாகப் பெண்ணின் வீட்டிற்கு விநியோகம் ஆனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்லைன் விநியோக சேவையின் நம்பகத்தன்மை குறித்தும், பொதிகளைக் கையாளும் முறை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும், இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.