மனைவி கண் முன்னே துப்பாக்கியால் சூட்டு கொல்லப்பட்ட இளம் கணவர்! அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் வசித்து வந்த இந்தியர் கவின் தசார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் வசித்து வந்தவர் கவின் தசார். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரை சேர்ந்தவர்.
மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிந்தியா என்பவரை காதலித்து கடந்த மாதம் இறுதியில், அவருடன் திருமணம் நடந்தது.
எதிர்வரும் 29ம் திகதி மனைவியுடன் கவின் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்துள்ளார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன், மனைவி சிந்தியா மற்றும் தன்னுடைய சகோதரி தீப்ஷி ஆகியோருடன் வணிக வளாகம் ஒன்றிற்கு பொருட்களை வாங்க சென்றார்.
இதன்பின் மோட்டர் சைக்கிளில் புதுமண தம்பதி வீடு திரும்பியபோது, சரக்கு லாரி ஒன்று இவர்களை மோதுவது போல் சென்றுள்ளது. இதனால், பைக்கில் இருந்து அவர்கள் தவறி விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அந்த லாரியை கவின் பைக்கில் விரட்டி சென்றிருக்கிறார். அதன் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை சிரித்துக் கொண்டே சென்ற லொறி சாரதி திடீரென துப்பாக்கியை எடுத்து கவினை நோக்கி 3 முறை சுட்டுள்ளார். இதில் கவின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.