பிரான்ஸில் கணவனை குத்தி கொலை செய்த மனைவி!
பிரான்ஸில் கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்றின் முடிவில், கணவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் புதன்கிழமை இரவு Morangis (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவிக்கிடையே இரவு 9 மணி அளவில் வாக்குவாதம் எழுந்துள்ளது.
இச்சம்பவத்தில் கணவன் கத்தி ஒன்றை வைத்து மனைவியினை மிரட்டியுள்ளார். பதிலுக்கு மனைவி ஒரு கத்தியை எடுத்து கணவனை சரமாரியாக குத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த கணவர் சில நிமிடங்களில் பலியாகியுள்ளார். பின்னர் தாக்குதல் நடத்திய மனைவி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில் கொல்லப்பட்ட கணவர் 41 வயதுடையவர் எனவும், தாக்குதல் நடத்திய மனைவி 38 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
அவர்களது 16 வயதுடைய மகன் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், அவரே பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தத்தாகவும் அறிய முடிகிறது.