கனடாவிலுள்ள மாகாணம் ஒன்றில் நாய்க்கு பதிலாக கணவனை கயிற்றில் பிணைத்து வாக்கிங் அழைத்து சென்ற இளம்பெண்!
கனடாவின் கியூபெக் மாகாணத்தில், இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தங்கள் வீட்டுக்கு அருகே நாய்களை அழைத்துச் செல்லமட்டுமே அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு 9 மணிக்கு வாக்கிங் சென்ற ஒரு ஜோடியை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
ஊரடங்கை மீறி ஏன் எளியே வந்தீர்கள் என்று கேட்டதற்கு, நாயை வெளியே அழைத்துச் செல்ல அனுமதி உள்ளது அல்லவா, அதனால் நான் என் நாயுடன் வெளியே வந்தேன் என்று கூறியுள்ளார் அந்த 24 வயது பெண்.
எங்கே உங்கள் நாய் என பொலிசார் கேட்க, இதுதான் என் நாய் என தனது 40 வயது கணவரை காட்டியுள்ளார் அவர்.
அந்த பெண் கையில் நாயின் கழுத்தில் கட்டும் கயிறு ஒன்று இருந்துள்ளது. அதை அவர் தன் கணவர் கையுடன் பிணைத்திருந்திருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த பொலிசார், விதிவிலக்குகளை பயன்படுத்தி தங்களை ஏமாற்றுவதற்காக அந்த ஜோடி இப்படி செய்துள்ளதை அறிந்து, அவர்களுக்கு ஆளுக்கு 1,200 டொலர்கள் அபராதம் விதித்துள்ளனர்.