நான் பதவி நீக்கம் செய்யப்படுவேன் ; புலம்பி தள்ளும் ட்ரம்ப்
இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறாவிட்டால் நான் பதவி நீக்கம் செய்யப்படுவேன், என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்த கட்சியினரிடையே புலம்பித் தள்ளியுள்ளார்.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்ட பின், அவர் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்யும் நேரத்தில் இடைக்கால தேர்தல் நடப்பது வழக்கம்.

இந்த தேர்தல் என்பது அமெரிக்காவில் கீழ்சபையான காங்கிரசில் 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட்டில் உள்ள 100 இடங்களில் 3ல் ஒரு பகுதியான, 33 இடங்களுக்கும் நடக்கும்.
டிரம்ப் 2024ம் ஆண்டு பதவியேற்ற நிலையில், வரும் நவம்பரில் அங்கு இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனிடையே வாஷிங்டனில், தன் கட்சி எம்.பி.,க்கள் மத்தியில் பேசிய டிரம்ப், '' நவம்பரில் நடக்கும் இடைக்காலத் தேர்தலில் நாம் பெரும்பான்மையை இழந்தால், ஜனநாயகக் கட்சியினர் என்னை பதவி நீக்கம் செய்ய எந்தக் காரணத்தையும் கண்டுபிடிப்பார்கள். அதனால் கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும்,'' என, குறிப்பிட்டார்.