இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு; ஈரானின் புதிய ஜனாதிபதியாக Mohammad Mokhber தெரிவு
ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் (Mohammad Mokhber) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) பயணித்த ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அந்நாட்டின் துணை ஜனாதிபதியான மொஹமட் முக்பர் (Mohammad Mokhber) , புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் இஸ்ரேல் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்தால், இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கற்பனைக்கு அப்பாற்பட்டு பதிலடி கொடுப்போம் என்று ஈரானின் உச்ச தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.