குயின்டன் டி காக் அதிரடி ஆட்டம்: பங்களாதேஷை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
2023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியை 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
உலகக் கிண்ண ஒருநாள் தொடரின் இன்று (24) போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 382 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 174 ஓட்டங்களையும், ஐடன் மார்க்ராம் 60 ஓட்டங்களையும் ஹென்ரிச் கிளாசென் 90 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் ஹசன் மஹ்மூத் அதிகபட்சமாக 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து, 383 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
பங்களாதேஷ் அணி சார்பில் தனித்துப் போராடிய மஹ்முதுல்லாஹ் அதிகூடிய ஓட்டங்களான 111 ஓட்டங்களைப் பெற்றார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் பந்து வீச்சில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுக்களையும், மார்கோ ஜான்சன், லிசாட் வில்லியம்ஸ், ககிசோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.