அமெரிக்கா டல்லாஸில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள குடிவரவு மற்றும் சுங்கச் சோதனை (ICE) மையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அமெரிக்க உள்துறை பாதுகாப்புப் பிரிவு பேச்சாளர் டிரிஷியா மெக்லாக்லின் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் யாரும் காயமடையவில்லை என்றும் எந்த அதிகாரியும் சுடப்படவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும், உயிரிழந்தவர்களின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்க புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.