ட்ரம்பின் வரி விதிப்பால் ஆசியவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீது 25 சதவீத வரியை விதித்தமையை தொடர்ந்து ஆசிய வாகன களஞ்சிய சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உலகளாவிய ரீதியிலான வர்த்தகப் போரை விரிவுபடுத்தியுள்ளதாக அமெரிக்காவுடனான நட்பு நாடுகள் குறிப்பிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், மகிழுந்துகள் மற்றும் இலகுரக பாரவூர்திகள் மீதான புதிய வரிகள் எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாகன தயாரிப்புகளை இறக்குமதி செய்யும் நாடுகளில் மெக்ஸிகோ, ஜப்பான், தென்கொரியா, கனடா, மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள் பாரிய விநியோகஸ்தர்களாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.