ரஷ்ய ஜனாதிபதி புடினின் கார் தீப்பற்றியதால் பரபரப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் ஒன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் லுபியங்காவில் அமைந்துள்ள எப்எஸ்பி தலைமையகத்திற்கு அருகில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் பாதுகாப்பு தொழில்நுட்பட மிக்க கார் ஒன்று திடீரென தீப் பற்றி எரிந்தது.
புடினின் பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்கள்
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு, அருகிலுள்ள உணவகத்தின் ஊழியர்கள் தீப்பற்றிய காரின் தீயை அணைத்தனர்.
சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிறது. அந்த வீடியோ காட்சிகளில் காரிலிருந்து அடர்ந்த கரும் புகை கிளம்புவதையும், காரின் பின்புறம் சேதம் அடைந்ததையும் காணமுடிகிறது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் ரஷ்ய ஜனாதிபதி புடினின் உத்தியோகபூர் கார் தீப்பற்றியதால் அவரது பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, வௌிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘புடின் விரைவில் இறந்துவிடுவார், இரு நாடுகளுக்கும் இடையிலான போரும் விரைவில் முடிவுக்கு வரும் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.