அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனேடிய மக்கள்!
டிரம்பிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா மக்கள், அமெரிக்க பொருட்களை வாங்குவதை தவிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதனால் கனடாவில் உள்ள பல கடைகளில், கனடா தயாரிபு மது பானங்கள் காலியாகி வரும் அதேவேளை அமெரிக்க மதுபான வகைகள் விற்பனையாகாமல் அப்படியே இருக்கிறது.
அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு வரும், சில வகையான மது பாணங்கள் முற்றாக தடைப்பட்டுள்ளது. இதனை இறக்குமதிசெய்ய கனடிய நிறுவங்கள் விரும்பவில்லை.
இதனால் அமெரிக்க கம்பெனிகள் பல நஷ்டமடைய ஆரம்பித்துள்ளது. அத்துடன் , Buy Canadian என்ற சுலோகம் பல சூப்பர் மார்கெட்டில் உள்ளது.
இதற்கு மதிப்பளித்து கனேடிய மக்கள் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க, தமது நாட்டு பொருட்களையே வாங்கி வருகிறார்கள். இதனால் உள்ளூர் உற்பத்தி பெருகி வருகிறது.