கனடாவில் நீக்கப்பட்ட வரி
கனடாவில் கார்பன் வரி அறவீடு ரத்து செய்யப்பட்டதனால் மக்களுக்கு நலன்கள் கிடைக்கப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிபரல் அரசாங்கம் கார்பன் வரியை நீக்கியதனால் ஒரு லீற்றது எரிபொருளுக்கு 17 சதங்கள் வரையில் நுகர்வோருக்கு விலை கழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்த மாற்றம் லிட்டருக்கு சுமார் 17 செண்ட் குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது," என ஒட்டாவா பல்கலைக்கழக சட்ட மற்றும் பொருளாதாரப் பேராசிரியர் ஸ்டூவர்ட் எல்ஜி (Stewart Elgie) தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் கனடாவின் கார்பன் வரி காரணமாக, நாட்டின் கிரீன்ஹவுஸ் வாயு வெளியீடு 7% குறைந்துள்ளது.
பல்லாண்டுகளாக உயரும் நிலையில் இருந்த கார்பன் உமிழ்வு, தற்போது குறைவாக உள்ளது. இது சூழலியல் கொள்கைகள் செயல்படுவதை நிரூபிக்கிறது," என எல்ஜி குறிப்பிட்டுள்ளார்.
புதிய பிரதமர் மார்க் கார்னி, நுகர்வோர் மீதான கார்பன் வரியை நீக்குவதாக அறிவித்தார்.
எனினும், தொழில்துறை அளவிலான கார்பன் வரிக்கு தொடர்ந்தும் அறவீடு செய்யப்பட உள்ளது. கனடாவின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நுகர்வோருக்கு இதனால் உடனடி நன்மை கிடைக்கும், ஆனால் சூழலியல் மற்றும் பொருளாதார எதிர்விளைவுகள் பற்றிய பாதிப்புக்கள் குறித்து வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.