ரஷ்யா - உக்ரைன் போர்ப் பதற்றம்; அமெரிக்கா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
உக்ரைனின் ஒட்டு மொத்த தேவைக்காக அமெரிக்க சுமார் ரூ.4,500 கோடி நிதி உதவி அளித்துள்ளது.
ரஷியாவுடனான முதல் நாள் போரில் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.நேற்று 2வது நாளாகவும் போர் நீடித்தது.
இதுவரை ரஷிய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன.
ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில், போரினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிவரும் உக்ரைனுக்கு சுமார் ரூ.4,500 கோடி நிதியுதவியாக வழங்க அமெரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “உக்ரைனின் ஒட்டு மொத்த தேவைக்காக உடனடியாக சுமார் ரூ.1900 கோடி வழங்கப்படும், மற்றும் பாதுகாப்பு ,கல்விக்கு உதவ சுமார் ரூ.2600 கோடி வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.