பிரான்ஸ் எரிசக்தி நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
பிரான்ஸ் எரிசக்தி நிறுவனமான Enedis அதன் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மின்தடையை தவிர்ப்பதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளது.
அதற்கமைய, தண்ணீர் தொட்டிகளில் மதியம் மற்றும் 2 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அணைத்து வைப்பதன் மூலம் குளிர்காலத்தில் ஏற்படும் மின்சார தடையை தவிர்க்க உதவியாக இருக்கும் என Enedis அறிவித்துள்ளது.
சுமார் 4.3 மில்லியன் வாடிக்கையாளர்களின் தண்ணீர் தொட்டிகளின் ஹீட்டர்களுக்கு மின்சார விநியோகிப்பதனை தற்காலிகமாக குறைக்க Enedis நிறுவனத்திற்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.
ஆற்றல் சேமிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இவ்வாறு ஹீட்டர்களை நிறுத்தி வைப்பதற்கான அனுமதி உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
11:00 முதல் மாலை 3.30 மணி வரையான காலப்பகுதியில் அதிகபட்சம் இரண்டு மணிநேரம், தண்ணீர் தொட்டிகளுக்கான மின்சாரத்தை தூரத்தில் இருந்து இயக்கும் ரிமோட் ஊடாக தடை செய்ய கூடிய வசதி Enedis நிறுவனத்திடம் உள்ளது.
மின் நுகர்வுக்கான உச்சகட்ட நேரப்பகுதியாக இது கருதப்படுவதால், 12:00 முதல் 2.00 மணிக்குள் இந்த தடை அமுல் செய்யப்படுகிறது என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நேரப்பகுதியை அறியாமல் குளிக்க செல்ல வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் எதிர்பாராத நேரத்தில் குளிர் நீரில் குளிக்க நேரிடும் அபாயம் உள்ளமையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஏற்கனவே 2.4 மில்லியன் மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திய அதே நேரத்தில் மின்சாரத்தின் மொத்த நுகர்வு 2.4 ஜிகாவோட்களால் குறைக்கப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் அளவு முழுமையான பாரிஸின் நுகர்வை விட சற்று அதிகமாகும் என நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் பெரிய வெற்றி மற்றும் இந்த குளிர்காலத்தில் மின்வெட்டுகளைத் தடுக்க தேவையான மாற்றத்தை ஏற்படுத்த இந்த நடவடிக்கையால் முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.