பிரான்ஸில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!
பிரான்ஸில் வாகன தரிப்பிட கட்டணத்தை தாமதமாக செலுத்தலாம் என கூறப்படும் மோசடி வேகமாக அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றங்களின் தடுக்கும் தேசிய நிறுவனம் இந்த மோசடி குறுந்தகவல் மற்றும் அதிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் தரவுகளை திருடுவதற்காக நுட்பமாக தொழில்நுட்பம் ஒன்றை மோசடியாளர்கள் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிஷிங் எனப்படும் இந்த மோசடி தனிப்பட்ட அல்லது தொழில்முறை தகவல்கள், வங்கி கணக்குகள், கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள் போன்றவைகளை திருடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில் வாகன நிறுத்துமிட கட்டணத்தை செலுத்த இணைப்பை அழுத்துமாறு குறுந்தகவல் ஒன்று பொது மக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
அதில் உள்ள இணைப்பை அழுத்தினால் பணத்தை செலுத்தலாம் என அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது எந்த நிர்வாகமும் உங்கள் வங்கி விவரங்கள் அல்லது கடவுச்சொற்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ கேட்கப்படாதென குற்றங்களின் தடுக்கும் தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.