இம்ரான் கான் உயிருடன் உள்ளாரா? சமூக வலைதளங்களில் பரவும் அதிர்ச்சி புகைப்படங்கள்

Pakistan Imran Khan Viral Photos Social Media
By Sahana Nov 26, 2025 11:14 PM GMT
Report

பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கான் இப்போது ஊழல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சிறையில் வைத்து அவர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் பரவி வருகிறது. மேலும், இது தொடர்பான சில அதிர்ச்சி போட்டோக்களும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தார். 2022ல் திடீரென அவருக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

இம்ரான் கான் உயிருடன் உள்ளாரா? சமூக வலைதளங்களில் பரவும் அதிர்ச்சி புகைப்படங்கள் | Imran Khan Shocking Photos Circulatin Social Media

கூட்டணிக் கட்சிகளே திடீரென தங்கள் ஆதரவை விலகிக்கொண்டதால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து ஊழல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேநேரம் தன் மீது தவறில்லை என்றே இம்ரான் கான் தொடர்ச்சியாகச் சொல்லி வந்தார். மேலும், தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகள் இருப்பதாகவும் அவர் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் பரவி வருகிறது.

சிறையில் வைத்து பிரதமர் இம்ரான் கான் கொல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ராவல்பிண்டியில் உள்ள அடயலா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மரணமடைந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த தகவல்களைப் பாகிஸ்தான் அரசு அல்லது சிறை நிர்வாகம் என யாரும் உறுதிப்படுத்தவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இம்ரான் கான் உயிருடன் உள்ளாரா? சமூக வலைதளங்களில் பரவும் அதிர்ச்சி புகைப்படங்கள் | Imran Khan Shocking Photos Circulatin Social Media

இருப்பினும், பாகிஸ்தான் நாட்டில் நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாக ட்வீட் செய்து வருகிறார்கள். அப்படி தான் ஒரு ட்விட்டர் கணக்கில், "பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் மற்றும் அவரது ஐஎஸ்ஐ நிர்வாகத்தினர் இணைந்து சிறையில் இருந்த இம்ரான் கானை கொன்றுவிட்டனர்.

இந்த தகவல் உண்மையாக இருந்தால், அது பாகிஸ்தானில் அரசு பயங்கரவாதம் உச்சத்தைத் தொட்டுவிட்டதைக் காட்டுகிறது. சீக்கிரமே உண்மைகள் உலகிற்குத் தெரிய வரும்" எனப் பதிவிட்டுள்ளனர்.

மேலும், இம்ரான் கான் ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கும் ஒரு போட்டோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இம்ரான் கான் உயிரிழந்துள்ளதாகச் சொல்லி சில வீடியோவும் கூட பரவி வருகிறது.

இருப்பினும், அதுவும் கூட அதிகாரப்பூர்வமாக எந்தவொரு பாகிஸ்தான் அரசு நிர்வாகமும் உறுதி செய்யவில்லை. இவை ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அல்லது எடிட் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US