பாகிஸ்தான் உச்ச நீதிமன்றில் கெஜ்ரிவால் வழக்கை உதாரணம் காட்டிய இம்ரான் கான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டதை அடுத்து வழக்குக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு ஆஜராகிய போது கெஜ்ரிவாலுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியதை உதாரணமாக சுட்டிகாட்டியுள்ளதாக அந்நாட்டு செய்திகளில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்குக்காக லட்சக்கணக்கான ஆதரவாளர்களை கொண்ட கட்சியின் தலைவரான இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நீதிபதிகள் முன்பு இம்ரான் கான் அவரது கருத்தை தெரிவிக்கையில்,
இந்தியாவில் பொதுத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக சிறையில் இருந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியது.
பிப்ரவரி 8ஆம் திகதி தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு நான் தேர்தலில் நிற்க தடை விதிக்கிறேன்.
நவாஸ் ஷெரீப் சிறையில் இருந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட வசதிகளை இப்போது எனக்கு அளித்துள்ள வசதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றார்.