பிரித்தானியாவில் கையெறி குண்டுகளால் வீட்டை அலங்கரித்த நபரால் பரபரப்பு!
பிரித்தானியாவில் நபர் ஒருவர் பயங்கரமாக வெடிக்கக்கூடிய குண்டுகள் என தெரியாமல் தனது வீடு முழுக்க கையெறி குண்டுகளால் அலங்கரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் கார்ன்வால் மாவட்டத்தில் சம்மர்கோட் கிராமத்தில், கடந்த மாதம் ஜனவரி 31 காலை 11.20 மணியளவில், ஒருவர் தான் மட்டுமின்றி அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள மக்களும் சேர்ந்து வெடித்து சிதறக்கூடிய அளவிற்கு ஒரு செயலை மேற்கொண்டுள்ளார்.
இருப்பினும், நல்லவேளையாக அப்படியொரு அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டது. அவர், தனது வீடு முழுக்க பயங்கரமாக வெடிக்கக்கூடிய சக்திவாய்ந்த கையெறி குண்டுகளால் அலங்கரித்துள்ளார்.
அவரது வீட்டில் வெடிகுண்டுகள் இருப்பது பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து, அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. அப்பகுதியைச் சுற்றி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.சம்மர்கோட் கிராமத்தில் மிகப்பாரிய பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு, முக்கியமான சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் மூடப்பட்டன.
டெவோன் மற்றும் கார்ன்வால் பொலிஸார் பின்னர் அந்த நபர் தனது வீட்டை உண்மையான வெடிக்கக்கூடிய கையெறி குண்டுகளால் அலங்கரித்ததை உறுதிப்படுத்தினர்.
இறுதியில், வெடிகுண்டு தடுப்பு பிரிவினரால் அவை அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.விசாரணையில், கைக்குண்டுகளை அலங்கார நோக்கங்களுக்காக மட்டுமே வாங்கியதாகவும், அவை உயிருள்ள குண்டுகள் என தெரியவில்லை என்றும் அந்த நபர் அதிகாரிகளிடம் விளக்கினார்.
இதன்போது வெடிபொருட்களை மதிப்பிடுவதற்கு பிரித்தானிய கடற்படையின் வெடிகுண்டு அகற்றல் (EOD) குழு அழைக்கப்பட்டது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.