பிரிட்டனில் இரண்டு வருடங்களில் இல்லாத அளவிற்கு சரிந்த பவுண்ட்ஸ் பெறுமதி!
ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் பிரித்தானியாவின் பொருளாதாரம் அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக பவுண்ட்ஸ் பெறுமதி இரண்டு வருடங்களில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
திங்கட்கிழமை பிற்பகலில் அமெரிக்க டொலருக்கு நிகராக பவுண்ட் மதிப்பு 1.1867 ஆக சரிந்துள்ளதாகவும், மார்ச் 2020க்குப் பிறகு அதன் மிக குறைந்த அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இரவு 9 மணிக்குப் பிறகு அது பவுண்ட்ஸ் பெறுமதி 1.189 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரிஸ் ஜோன்சன்(Boris Johnson)பிரதமர் பதவியை இராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு, அவருக்குப் பதிலாக வேறொருவரை மாற்றுவதற்கான போட்டி தொடங்கியுள்ளது.
இந்த நெருக்கடியால் இங்கிலாந்தின் இருண்ட பொருளாதாரக் கண்ணோட்டத்தில் சேர்த்துள்ளது. பணவீக்கம், மந்தநிலையின் ஆபத்து, பிரெக்சிட் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவை ஏற்கனவே பொருளாதாரத்தை பாதித்துள்ளது.
அதே சமயம், இந்த வாரத்தின் முக்கியமான அமெரிக்க பணவீக்கத் தரவுகள், முதலீட்டாளர்கள் குறைந்த ஆபத்துள்ள நாணயங்களைத் தேடுவதால் டொலரின் மதிப்பு உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        