பிரான்ஸில் சுப்பர் மார்கெட்டுகளில் அன்பாகவும் பேசி ஏமாற்றும் இளம் பெண்கள்!
பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுப்பர் மார்கெட்களின் கார் நிறுத்துமிடங்களில் வாடிக்கையாளர்களை பாதிக்கும் மோசடி குறித்து நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுப்பர் மார்கெட்டுக்கு வருவோரை மயங்கும் வகையில் இளம் பெண்கள் இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர். மிகவும் அழகாகவும் அன்பாகவும் பேசி ஏமாற்றுவதாக பாதிக்கப்பட்டவர் ஒருவர் தெரிவித்தள்ளார்.
இவர்களின் அன்பான வார்க்கைகளுக்கு ஏமாற்றப்படும் நபர்கள் பாரிய அளவில் பணத்தை இழப்பாதாகவும் இதனால் சுப்பர் மார்க்கெட் செல்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். Pyrénées-Orientales பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் கொள்வனவை முடித்துவிட்டு பொதிகளை எனது காரில் ஏற்றிக் கொண்டிருந்தேன்.
அப்போது, ஒரு பெண், தான் சூப்பர் மார்க்கெட் ஊழியர் எனக் கூறினார். நான் ஒரு பொருளுக்கு அதிக கட்டணம் செலுத்திவிட்டதாகவும், எனக்கு மீதிப் பணம் வழங்க இருப்பதாகவும் கூறி, அவரை என்னை அணுகினார்.
பின்னர் அந்த பெண் என்னிடம் எனது வங்கி அட்டையை ஒப்படைக்குமாறும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக எனது பின் இலக்கத் கூறுமாறும் கூறியுள்ளார். அதற்கமைய, அட்டையை பெற்றவுடன் சுப்பர் மார்க்கெட்டில் உள்ள ATM இயந்திரத்திற்கு சென்று எனக்கே தெரியாமல் 400 யூரோவை பெற்றுக் கொண்டுள்ளார்.
அதனை என்னால் மீளப்பெற முடியாமலேயே போயுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னர் எனக்கு ஒருவகையான அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் தனியாக செல்வதை தவிர்த்து விட்டேன். சுப்பர் மார்க்கெட்டுக்கு செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகனை என்னுடன் அழைத்துக் கொண்டே செல்வேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்ற சம்பவம் பல சுப்பர் மார்க்கெட்களில் இடம்பெற்றுள்ளது. இது முழுமையாக வயோதிபர்களை குறி வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வங்கி அட்டையை வழங்க மறுக்கும் நபர்களிடம் பலவந்தமாக பறித்து எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுப்பர் மார்ககெட்களின் சீருடையின்றி வருபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.