ஜேர்மன் கிறிஸ்மஸ் சந்தையில் பரபரப்பு சம்பவம்; இருவர் பலி ...60 பேர் காயம்!
ஜேர்மனியிலுள்ள கிறிஸ்மஸ் சந்தையொன்றுக்குள் வைத்தியர் ஒருவர் காரைச் செலுத்தி தாக்குதலை ஏற்படுத்தியதில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் மக்டிபேர்க்கில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 60 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்திய 50 வயதுடைய வைத்தியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம்
குறித்து வைத்தியர் சவுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜேர்மனிக்கு குடிபெயர்நதுள்ளதாக கூறப்படுகின்றது.
சந்தைக்குள் காரை செலுத்தி விபத்து இடம்பெறும் போது சந்தைக்குள் சனக்கூட்டம் காணப்பட்டுள்ளதாகவும், விபத்தை ஏற்படுத்திய கார் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
விபத்தினை ஏற்படுத்திய கார் ஜேர்மனியின் முனிச் நகரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஜேர்மனியின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுவொரு திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாமெனவும் காருக்குள் வெடிபொருட்கள் உள்ளதாகவும் ஜேர்மனிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.