பிரித்தானியாவிலுள்ள கார் நிறுத்தும் இடம் ஒன்றில் நபர் ஒருவருக்கு நடந்தேறிய சம்பவம்!
பிரித்தானியாவில் டெஸ்கோ கார் பார்க்கில் காரை நிறுத்தி விட்டு மீண்டும் கார் எடுக்க வந்தவருக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது, பிரித்தானியாவில் டெஸ்கோ கார் பார்க்கில் நபர் ஒருவர் காரை நிறுத்திவிட்டு கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். பின்னர் பொருட்களை வாங்கிவிட்டு திருப்பி செல்ல கார் எஞ்சினை Start செய்த போது சத்தம் பெரிதாக கேட்டுள்ளது.
பின்னர் காரின் உரிமையாளர் காரை விட்டு இறங்கி வந்து பார்த்தபோது புகைப்படத்தில் இருந்து இந்த பாகத்தை காணவில்லை. இப்பகுதியில் சன நடமாட்டம் அதிகம் உள்ள மிகப்பெரிய பகுதி என்பதால் அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து Tesco Car Park யில் குறித்த நபர் கேட்டபோது இங்கு சிசிரிவி இல்லை என தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.



