ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
EU+ இல் பதிவு செய்யப்பட்ட புகலிட விண்ணப்பங்கள் ஜூலை மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தொடர்ந்து மூன்றாவது மாதமாக 70 000 ஐத் தாண்டியுள்ளதாகவும், இது பல ஆண்டுகளாக நடக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
ஜூலை 2021 இல் பதிவு செய்யப்பட்ட 51 000 விண்ணப்பங்கள் மற்றும் ஜூலை 2020 இல் 42 900 விண்ணப்பங்களுடன் ஒப்பிடும் போது இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானியர்கள் மற்றும் சிரியர்கள் இரண்டு பெரிய விண்ணப்பதாரர் குழுக்களாக தொடர்கின்றனர், அதேசமயம் இந்திய நாட்டவர்களும் துனிசியர்களும் அதிக விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
புகலிடத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய ஏஜென்சி (EUAA) வெளியிட்ட பகுப்பாய்வு, ஜூலை 2022 இல் EU+ இல் சுமார் 72 800 புகலிட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது.
இது தொடர்ந்து 3வது மாதமாக 70 000 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜூலை மாதம், EU+ இல் தற்காலிக பாதுகாப்பிற்காக சுமார் 236 000 பதிவுகள் இருந்தன, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கும் அக்டோபர் 2 க்கும் இடையில் மொத்தம் 4 மில்லியன் பதிவுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்திய மாற்றும் ஆப்கானியர்கள் ஜூலை மாதத்தில் மிகப்பெரிய விண்ணப்பதாரர் குழுவாக இருந்தனர். அதைத் தொடர்ந்து சிரியர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான், துருக்கிய நாட்டினர், வெனிசுலா மற்றும் கொலம்பியர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர்.
இதேவேளை, 2014ம் ஆண்டு முதல் இந்தியப் பிரஜைகள் மற்றும் துனிசியர்கள் அதிக மாதாந்திர விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.