கனேடியர் கொல்லப்பட்ட விவகாரம்: இந்தியாவின் பங்கு தொடர்பில் சந்தேகம் எழுப்பியுள்ள நாடு
கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டிய விடயம் இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவுகளில் பெரும் பிளவை ஏற்படுத்திய விடயம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், கனடாவின் கூட்டாளி நாடொன்று, கனேடியர் கொல்லப்பட்ட விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து தற்போது சந்தேகம் எழுப்பியுள்ளது.
கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம் சாட்டிய விடயத்தில், 'Five-Eyes Intelligence' என்னும் அமைப்பு கனடாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.
அந்த அமைப்பில், கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
இந்நிலையில், அந்த அமைப்பிலுள்ள நியூசிலாந்து, கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம் சாட்டிய விடயம் தொடர்பில் சந்தேகம் எழுப்பியுள்ளது.
இந்தியாவுக்கு அரசு முறைப்பயணமாக வந்துள்ள நியூசிலாந்து துணைப்பிரதமரான Winston Peters, இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
நியூசிலாந்தின் துணைப்பிரதமரான Winston Peters, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரும்கூட. இந்திய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், நான் ஒரு பயிற்சி பெற்ற சட்டத்தரணி என்னும் முறையில் பார்க்கும்போது, வழக்கு எங்கே, ஆதாரம் எங்கே, கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட விடயம் எங்கே, இங்கே, இப்போது, அப்படி ஏதாவது ஆதாரம் இருக்கிறதா, அப்படி ஒன்று இல்லையே என்று கூறினார்.
'Five-Eyes Intelligence' என்னும் அமைப்பிலுள்ள மற்ற நாடுகள் கனடாவுக்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், நியூசிலாந்தின் நிலைப்பாடு சற்று மாறியுள்ளது அதன் துணைப்பிரதமரின் கூற்றிலிருந்து தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.