இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டம்: அவுஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்திய இந்தியா!
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ஓட்டங்களால் வித்தியசாத்தில் வெற்றியை பெற்றுள்ளது.
கேரளா மாநிலம் - திருவனந்தபுரத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 58 ஓட்டங்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 ஓட்டங்களையும், இஷான் கிஷன் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து, 236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியை தழுவியது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிகபட்சமாக 45 ஓட்டங்களையும், டிம் டேவிட் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2 பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.