இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தம்: இந்திய தூதர் தகவல்
இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை கனடா திடீரென நிறுத்தியுள்ளதாக, கனடாவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் நடைபெறும் G 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுக்கு பயணிக்க இருக்கும் நிலையில், இந்தியாவுடனான வர்த்த பேச்சுவார்த்தைகளை கனடா திடீரென நிறுத்திவிட்டதாக, இந்திய உயர் ஸ்தானிகரான சஞ்சய் குமார் வர்மா தெரிவித்துள்ளார்.
கனடா தரப்பிலிருந்து, இந்த பேச்சுவார்த்தைகளை கொஞ்சம் இடைநிறுத்துவோம், மேலும் என்ன செய்யமுடியும் என்று பார்க்கலாம், அதற்குப் பிறகு மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் துவக்கலாம் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் வர்மா.
என்ன காரணம் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆனால், இது கனடா தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கை. ஆகவே, அதை மறுக்கமுடியவில்லை என்று கூறியுள்ளார் வர்மா.
PHOTO BY PATRICK DOYLE /THE CANADIAN PRESS