இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின்(வயது 89) உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல் காரணமாக மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் விரைவில் குணமடைய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே மன்மோகன் சிங் விரைவில் குணமடையவும் நலமுடன் இருக்கவும் தான் பிரார்த்தனை செய்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2004 மே முதல் 2014 மே வரை இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.