அமெரிக்காவின் அறிவிப்பால் பெரும் சிக்கலில் இந்தியா ; நாளை முதல் ஆரம்பம்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 25% அபராத வரி ஆகஸ்ட் 27ம் திகதி முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்ததால் இந்திய- - அமெரிக்க உறவுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இதில் 25 சதவீத வரி ஆகஸ்ட் 7ல் இருந்து அமுலில் உள்ளது.
அபராத வரி
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி அமலுக்கு வருமா? நிறுத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் இன்று அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்திய பொருட்கள் மீதான 25 சதவீதம் அபராத வரி ஆகஸ்ட் 27ம் திகதி அதிகாலை 12.01 மணிக்கு (EST) அமலுக்கு வருகிறது. இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர உள்ளது.