ட்ரம்ப் வரிவிதிப்புக்கு பின் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யும் முதல் நாடாக இந்தியா
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகளைத் தவிர்ப்பதற்காக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முதல் நாடாக இந்தியா மாறக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரஸ்பர வரி விதிப்பு
அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதிகள் மீதான பரஸ்பர வரி தற்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 8 ஆம் திகதியுடன் மீண்டும் வரி அமுலுக்கு வர உள்ளது.
இந்நிலையில் ஸ்காட் பெசன்ட் கூறியதாவது, இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான முடிவை எட்ட உள்ளன. இந்தியாவுடன் குறைந்த எண்ணிக்கையில்தான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்ளது.
இந்தியா தன்னிச்சையாக ரூபாய் மதிப்பை மாற்றியமைப்பதில்லை. எனவே இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது அமெரிக்காவுக்கும் மிக எளிதான விஷயமாகவே உள்ளது.
வரி விதிப்பு விடயத்தில் பிற நாடுகளும் இதேபோல நடந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் விரும்புகிறாா் என்று தெரிவித்துள்ளார்.